பதிவு செய்த நாள்
31
டிச
2013
11:12
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஸ்ரீராம ஐயப்ப பக்தசபையினர் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், லட்சார்ச்சனை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, நடுஅக்ரஹாரம் ஸ்ரீராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. முதல்நாள், ஏகாததிருத்ர பூஜைகளுடன், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மாலையில் புதிதாக மாலையணிந்த பக்தர்களுக்கு, கன்னிபூஜை,திவ்யநாம வழிபாடு நடந்தது. இரண்டாம் நாள் அதிகாலை முதல் லட்சார்ச்சனை பூஜைகள் துவங்கியது. ஸ்ரீபாஸ்கர வாத்தியார் தலைமையில் வேதவிற்பன்னர்கள் ஜெபம், ஹோமம், பூஜைகள் செய்தனர். இரவு பெண்களின் பஜனை வழிபாடு, ஐயப்பசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை பக்தசபா தலைவர் வைகுண்டராமன், துணைத் தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் சங்கரசுப்பிரமணியன், சத்தியவாகீஸ்வரன் செய்தனர்.