பதிவு செய்த நாள்
31
டிச
2013
11:12
திண்டுக்கல்: ஆந்திராவில் இருந்து திண்டுக்கல் வழியாக, சைக்கிளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் சென்றனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏழுருவில் இருந்து உமா மகேஷ்வரராவ் தலைமையில், பெட்டிரெட்டி, ராம்பாபு, சீனிவாசன், ஆனந்த், சுரேஷ் உட்பட 12 பேர் கொண்ட குழுவினர், டிச.,23 ல் சபரிமலைக்கு சைக்கிளில் புறப்பட்டனர். நேற்று திண்டுக்கல் வந்தனர். தொடர் பயணமாக சபரிமலைக்கு 1200 கி.மீ., துாரம் சைக்கிளில் பயணம் செய்யும் இவர்கள், ஓய்விடங்களில் ஐயப்பன் பாடல்களை பாடி மகிழ்கின்றனர். சபரிமலை தரிசனம் முடித்து ஆந்திராவிற்கு செல்ல, அங்கிருந்து சைக்கிள்களை பார்சல் செய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி விட்டு, பஸ்சில் செல்ல உள்ளனர். அவர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக சைக்கிளில் சபரிமலைக்கு வந்து செல்கிறோம். சைக்கிளில் சென்றுவருவதால், உடலும், மனமும் நன்றாக உள்ளது, என்றனர்.