திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த காடியார் கிராமத்தில் உள்ள பாண்டுரங்கன் பஜனைக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த காடியார் கிராமத்தில் புதிதாக பாண்டுரங்கன் பஜனைக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் ஆஞ்சநேயர் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கணபதி ஹோமம் நடந்தது. மாலை 6 மணிக்கு பரனூர் கிஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைமையில் முதல்கால யாகசாலை பூஜைகள், ஆஞ்சநேயர் பிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு விசேஷ திரவிய ஹோமம், இரண்டாம்கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடாகி 9.30 மணிக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.