பதிவு செய்த நாள்
31
டிச
2013
11:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், மணம்பூண்டி ரகூத்தமர் மூலபிருந்தாவனத்தில் 441 வது ஆராதனை விழா நான்கு நாட்கள் நடக்கிறது. பாவபோதகர் என போற்றப்பட்டவர் ஸ்ரீ ரகூத்தம தீர்த்தர். உத்திராதி மடத்தின் குருவான இவரது 441 வது ஆண்டு ஆராதனை விழா ஜன., 10ம் தேதி துவங்குகிறது. அன்று அதிகாலை 5.00 மணிக்கு மூலபிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மறுநாள் ஏகாதசி விரதம், அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜை, 7 மணிக்கு பண்டிட்களின் பிரசங்கம், 12.30 மணிக்கு மூலராமருக்கு மகா பூஜை, இரவு 8 மணிக்கு பஜனை நடக்கிறது. தொடர்ந்து 12ம் தேதி துவாதசி,13ம் தேதி திரயோதசி விழாக்கள் நடக்கிறது. நான்கு நாட்கள் நடைபெறும், இவ்விழாவில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை உத்திராதி மடத்தின் குருஜி ஸ்ரீ சத்யார்த்தம தீர்த்த சுவாமிகளின் உத்தரவின்படி பிருந்தாவனத்தின் செயலாளர் ஆனந்த தீர்த்தாசார்ய சிம்மலகி செய்து வருகிறார்.