பதிவு செய்த நாள்
31
டிச
2013
11:12
சேலம்: காடையாம்பட்டி காரியசித்தி வீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமந் ஜெயந்தி விழா, நாளை கொண்டாடப்படுகிறது.நாளை அதிகாலை, 4 மணி முதல், 5 மணி வரை, 24 வகை அபிஷேக அலங்கார பூஜையும், 6 மணி முதல், 7 மணி வரை, திருப்பாவை பாராயணம், காலை, 7 மணி முதல், 7.30 வரை, சிறப்பு பூஜை மற்றும் அலங்கார சேவையும், 7.30 க்கு மேல் அஸ்டோத்ர பூஜை மற்றும் பக்தர்களின் வழிபாடு, மாலை, 3 மணிக்கு அனுமந் சகஸ்ரநாம அர்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.ஏற்பாடுகளை, காடையாம்பட்டி, பொன்னார் கூடல் காரியசித்தி வீர ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகக்குழுவினர் செய்து வருகின்றனர்.