செஞ்சி: செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று 108 மஹா யாக சங்காபிஷேக விழா நடந்தது. காலை 10 மணிக்கு மங்கள இசையும், 10.15 மணிக்கு சங்கு அலங்காரமும், 11 மணிக்கு மகா சங்கல்பமும், 11.40க்கு 108 திரவியங்களை கொண்டு சிறப்பு ஹோமமும் நடந்தது. 2.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 2.45 மணிக்கு மகா அபிஷேகமும், 4.30 மணிக்கு 108 சங்கு மகா அபிஷேகம் நடந்தது. 5.30 மணிக்கு மகா தீபாராதனையும், 6 மணிக்கு சுவாமி கோவில் உலாவும் நடந்தது. பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது.