மயிலாடுதுறை: நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலத்தில் புகழ்பெற்ற செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது. இந் த கோவிலில் உள்ள தனி சன்னதியில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேய சுவாமி பிரார்த்தனை தலமான இந்த கோவிலில் மார்கழி மூல ந ட்சத்திரத்துடன் கூடிய அம்மாவாசையான ஸ்ரீஹனுமத் ஜெயந்தி திரு விழா கொண்டாடப்பட்டது. ஹனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று இரவு 12 மணி க்கு கோயில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகா லை 5மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டன. தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அர்ச்சனை செய்து ஸ்ரீ திரி நேத் ர தச புஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டனர். இரவு 7 மணிக்கு மங்கள வாத்திய ம் முழங்க சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது.