புதுச்சேரி: கம்பளி சுவாமிகள் மடத்தில் கம்பளி ஞான தேசிக சுவாமிகள் 140வது ஆராதனை விழா மற்றும் யோக மகரிஷி கீதானந்த கிரி குருமகராஜ் 20வது ஆராதனை விழா நேற்று நடந்தது. தட்டாஞ்வசாடி, சுப்பையா நகரில் கம்பளி சுவாமிகள் மடத்தில் நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பக்தி பாடல்கள், பஜனைகள், கீர்த்தனைகள், சுவாமிக்கு, ஆராதனைகள் நடந்தது. பின், கம்பளி சுவாமிகள் மடாதிபதி யோகாச்சாரியா டாக்டர் ஆனந்த பாலயோகி கிரி முன்னிலையில் கம்பளி ஞான தேசிக சுவாமிகளுக்கு மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிப்பட்டனர். 12:15 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது.யோக மகரிஷி கீதானந்த கிரி குரு மகராஜ் 20வது ஆராதனை விழாவையொட்டி, அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவரது இருக்கை. பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மலர் தூவி வழிபட்டனர். டாக்டர் ஆனந்த பாலயோகி கிரி அருளாசி வழங்கினார். நிகழ்ச்சியில், யோகாஞ்சலி நாட்டியாலயா மீனாட்சி தேவி பவனானி, மேலாளர் சண்முகம், கஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.