கன்னியாகுமரி: பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 8 வசூலாக கிடைத்துள்ளது. கன்னியாகுமரியில் உள்ள பகவதியம்மன் கோயிலில் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை சார்பில், நாள்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கை மூலம் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 8 வசூலாக கிடைத்தது.