மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில் "பகல் பத்து உற்சவத்தை அடுத்து, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி துவங்கியது. தினமும் காலை பெருமாள் சுவாமி முன் பாசுரம் பாடப்படுகிறது. ஐந்தாம் நாள் பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10ம் தேதி இரவு பெருமாள் சுவாமி நாச்சியார் திருக்கோலத்தில் மோகனி அவதாரத்தில் திருவீதி உலா வருவார். தொடர்ந்து, 11ம் தேதி காலை 6.00 மணிக்கு வைகுண்ட ஏகாதசிக்கு"சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.