பதிவு செய்த நாள்
07
ஜன
2014
10:01
புவனேஸ்வர்: புரி ஜெகநாதர் கோவில் பூசாரிகளுக்கு, பயோமெட்ரிக் கார்டு முறைப்படி, வருகைப் பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புரியில், 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிரசித்தி பெற்ற, ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்கு, நடைபெறும் பூஜைகள் மற்றும் வழிபாட்டிற்காக, 2,000 அர்ச்சகர்கள் உள்ளனர். இவர்களின் வருகையை கண்காணிப்பதற்காகவும், போலி அர்ச்சகர்களை தடுக்கவும், பயோமெட்ரிக் கார்டு எனப்படும், இயந்திரத்தில், விரல் ரேகை பதிவு மூலமான, வருகை பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.கோவில் பிரமாண்டமாக இருப்பதாலும், அர்ச்சகர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாலும், அவர்களை கட்டுப்படுத்த, இந்த முறை எளிதாக இருப்பதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.