திருக்கனூர்: கூனிச்சம்பட்டு தேவநாத சுவாமி திருக்கல்யாண உற்சவம் 12ம் தேதி நடக்கிறது. திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் புகழ் வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத தேவநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் 12ம் தேதி சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி, அன்று பிற்பகல் 2:00 மணிக்கு மகா ஹோமம், திருமஞ்சனம், சாற்றுமறை நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு Œஹஸ்ரநாம பாராயணம், மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேவநாத சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. உற்சவ ஏற்பாடுகளை தேவநாத சுவாமி திருக்கல்யாண விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.