பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. பழநி அ.கலையம்புத்தூர், அக்ரஹார பகுதியில் எழுந்தருளியுள்ள கைலாசநாதர், கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், ருத்ர ஜெபம் நடந்தது. ருத்ர ஜெபத்தில் வைக்கப்பட்ட கலச நீர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.