நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த வடுவகுப்பம் கிராமத்தில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் (11ம் தேதி) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கபடுகிறது. திருமலை திருப்பதி திருவேங்கடமுடையான் கோலத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.