பதிவு செய்த நாள்
08
ஜன
2014
11:01
சிவகாசி: பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, டிவி தொடர், வெட்டு, குத்து காட்சிகள் பார்க்க கூடாது,""என, கிருபானந்த வாரியார் சீடரின் மனைவி லதா கதிர்வேல் கூறினார். சிவகாசி அருணகிரிநாதர் சபையின் சார்பில், மாரியம்மன் கோயிலில் நடந்த, ஆன்மிக சொற்பொழிவில், "கர்ணன் கண்ட கருடவாஹன காட்சி என்ற தலைப்பில்,அவர் பேசியதாவது: கடவுள் எப்போதும் நியாயத்தின் பக்கம்தான் இருப்பார். உலக அளவில் அதிக ஆலயம் இருப்பது விநாயகருக்கும், அம்பாளுக்கும்தான். பலிகொடுப்பது என்பது, ஆடு, மாடு, கோழியை வெட்டி பலிகொடுப்பது அல்ல. பலி கொடுப்பது என்பது, தன் அங்க அவையங்களை, தானே அறுத்து பலி கொடுப்பதுதான். சைவ உணவு சாப்பிட்டால், நல்ல குணம் உண்டாகும். அசைவ உணவு சாப்பிட்டால், மிருக குணம் உண்டாகும். பெற்றோர்கள், குழந்தைகளை, நல்ல வார்த்தைகள் சொல்லி வாழ்த்த வேண்டும். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, டிவி தொடர், வெட்டு, குத்து காட்சிகள் பார்க்க கூடாது. தினமும் இறைவனிடம் அன்பான வேண்டுகோள் வையுங்கள். குழந்தைகளுக்கு. நீண்ட ஆயுளை கேளுங்கள். நோயற்ற வாழ்வு வாழ்வு, ஆயற்கலை 62யையும், கல்வி அறிவை கேளுங்கள். இம் மூன்றையும் பெற்றாலே. செல்வந்தர் ஆகிவிடலாம். தாய் கர்ப்பிணியாக இருக்கும் போது, இசை கேட்டால் கருவில் உள்ள ஆறு மாத குழந்தை கை, கால்களை உதைத்து ஆடுகிறது என்பதை, சமீபத்திய ஆய்வுகள் உறுதிபடுத்தி உள்ளன. கருவில் உள்ள குழந்தைகள் நல்லவற்றை கேட்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள். ஆலயம் தொழுவது நன்று. பிரகலாதன் சரித்திரம் கேட்பது மிக நன்று. என்றார்.