கூடலூர்: கூடலூர் நம்பாலகோட்டை வேட்டைக்கொருமகன் கோவில், சிவன் மலை பகுதியை கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சீரமைத்தனர். கூடலூர் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் மாணவர்கள் சார்பில், 7 நாட்களாக என்.எஸ். எஸ்., சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில், கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இந்த குழுவினர், சளிவயல், புளியாம்பாறை பகுதிகளில் சிறப்பு முகாம் அமைத்து, சேவை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் நம்பாலகோட்டை வேட்டைகொருமகன் கோவில், சிவன்மலை பகுதிகளில் முட்புதர்களை அகற்றினர்.