ஈரோடு: வெட்டுக்காட்டுவலசு சைவ மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. கோயிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலையில் நடைபெற்றது. பெண்கள், ஆண்கள் என ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதையடுத்து பொங்கலிடல், அலகு குத்துதல், அக்னிக் கும்பம் எடுத்து வருதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.