காங்கயம்: சிவன்மலை முருகன் கோவில் தைப்பூச தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. 11-ஆம் தேதி வீர காளியம்மன் மலைக் கோயிலுக்கு எழுந்து அருளல், 12-ஆம் தேதி காலை 9 மணிக்கு கால சந்தி, 13-ஆம் தேதி மண்டப கட்டளை காலசந்தி மற்றும் 16-ஆம் தேதி மைசூர் பல்லக்கில் சாமி திருமலை வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. 18-ஆம் தேதி திருத்தேர் மலையை வலம் வந்து, 19-ஆம் தேதி நிலை அடைகிறது.