பதிவு செய்த நாள்
10
ஜன
2014
11:01
பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில், 1.49 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. பழநியில், தைப்பூசத்தை முன்னிட்டு, பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கோயில் உண்டியல், 13 நாட்களில், திறந்து எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக, 1,49,21382 ரூபாயும், வெளிநாட்டு கரன்சி, 381, தங்கம் 216 கிராம், வெள்ளி, 6,012 கிராம் கிடைத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியிலான, தாலி,மோதிரம், ஆள்ரூபம், பாதம், கைவிலங்கு, கொலுசுகள், காசுகள் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர். எண்ணிக்கையின் போது, இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி உடனிருந்தார்.