பதிவு செய்த நாள்
10
ஜன
2014
11:01
பிதவுராகர்: கைலாஷ் - மானசரோவர் யாத்திரை குறித்து, மத்திய வெளி உறவு துறை அமைச்சகம், சீன அரசு மற்றும் பயண ஏற்பாட்டாளர்களுடன் ஆலோசனை செய்து, ஜூன் 9ம் தேதி துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, குமாவூங் மண்டல் விகாஸ் நிகாமின் நிர்வாக இயக்குனர், தீபக் ராவத் கூறியதாவது:இமயமலையில் அமைந்துள்ள, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை, ஜூன், 9ம் தேதி துவங்குகிறது. 60 பேர் கொண்ட குழுவாக, 18 குழுக்களாக பக்தர்கள் அனுப்பப்படுவர். ஒவ்வொரு குழுவும், யாத்திரையை நிறைவு செய்ய, 22 நாட்கள் ஆகும்.புனித யாத்திரை வரும், பக்தர் ஒவ்வொருவரும், இந்திய எல்லைக்குள், 32 ஆயிரம் ரூபாயும், சீன எல்லைக்குள், அந்நாட்டு அதிகாரிகளிடம், 56 ஆயிரம் ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.