பதிவு செய்த நாள்
10
ஜன
2014
11:01
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டதில், 52 கிராம் தங்கம், 190 கிராம் வெள்ளி, 39 லட்சத்து, 87 ஆயிரத்து, 229 ரூபாய் காணிக்கை, அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வந்து செல்கின்றனர். ஸ்வாமிக்கு, விசேஷ தினங்கள் மட்டுன்றி, மற்ற தினங்களுக்கும், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, அலங்காரம், தங்கத்தேர், கவசங்கள் சாத்துதல் ஆகியவவை நடக்கிறது.பக்தர்கள், கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். நேற்று, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில், உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.அதில், 52 கிராம் தங்கம், 190 கிராம் வெள்ளி, 39 லட்சத்து, 87 ஆயிரத்து, 229 ரூபாய், பக்தர்களின் காணிக்கை எடுக்கப்பட்டு, அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.