பதிவு செய்த நாள்
10
ஜன
2014
11:01
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் இருந்து, ஐந்து டன் பூக்கள் மாலையாக தொடுக்கப்பட்டு, ஏகாதசி முன்னிட்டு, திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.திருச்செங்கோடு, திருமலை திருப்பதி நாராயண நித்ய புஷ்பகைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில், வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, ஆந்திர மாநிலம், திருப்பதி கோவிலை அலங்கரிக்க, ஆண்டுதோறும், பூமாலைகள் தொடுத்து அனுப்புவது வழக்கம்.அதன்படி, நேற்று, திருச்செங்கோட்டில் இருந்து, ஐந்து டன் எடையுள்ள பூக்களை, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலங்கார மாலைகளாக தொடுத்தனர். அதில், சாமந்தி, செவ்வந்தி, அரளி, மரிக்கொழுந்து, பன்னீர் உள்ளிட்ட பூக்களை, மாலையாக தொடுத்தனர். அதனை, நூற்றுக்கணக்கான கூடைகளில் வைத்து, இரண்டு லாரிகள் மூலம் நேற்று இரவு, அகரமஹால் திருமண மண்டபத்தில் இருந்து, பக்தர்கள் பாதுகாப்புடன் திருப்பதி கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.சபா நிர்வாகிகள் சந்திரசேகரன், கனகராஜ் உள்ளிட்ட பலர், மாலைகள் சூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.