பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் விவேகானந்தரின் 150-வது ஆண்டு நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2014 12:01
பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில், சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டு நிறைவு கலை விழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றன.தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசியது:சுவாமி விவேகானந்தர் இளைஞர்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தவர். அவரது 150-வது ஆண்டு நிறைவு கலை விழாவில் சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் நாட்டுப்புற கலைஞர்களின் இசை நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.