ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் சிற்பக்கூடம் சீரமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2014 12:01
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலில் தல வரலாற்றை விளக்கும் வகையில் பிரசித்தி பெற்ற 3ம் பிரகாரத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராமலிங்க பிரதிஷ்டையை விளக்கக்கூடிய ஒலி-ஒளி கண்காட்சி சிற்பக்கூடம் பக்தர்களின் பார்வைக்காக அமைக்கப்பட்டது. இந்த சிற்பக்கூடத்தில் ராமபிரான் சீதா தேவியருடன் சேர்ந்து சிவ லிங்கத்திற்கு பூஜை செய்வது போன்றும், அருகில் ஆஞ்சநேயர், நாரதர் உள்பட பல்வேறு முனிவர்கள் நிற்பது போன்றும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்து கற்களால் வடிவ மைக்கப்பட்டு அதன் மீது வர்ணங்கள் பூசப்பட்டுள்ளது. சிற்பக்கூடத்தை காணும் பக்தர்களுக்கு கோவிலின் தல வரலாற்றை விளக்கும் வகையில் காட்சிக்கேற்ப மின் விளக்குகள் மாறி மாறி கதாப்பாத்திரத்தின் மீது படும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பக்கூடம் முறையாக பராமரிக்கப்படாமல் பயனற்று கிடந்தது. இதனால் பக்தர்கள் மனவேதனை அடைந்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக பக்தர்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.சீரமைப்புஇதையடுத்து ரூ.1லீ லட்சம் செலவில் சிற்பக்கூடத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கியது. இதில் சேதமடைந்த சிலைகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை முதல் இந்த சிற்பக்கூடத்தை பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.