பதிவு செய்த நாள்
15
ஜன
2014
10:01
கோவை: சித்தாபுதூர் பட்டத்தரசியம்மன் கோவிலில் 108 பொங்கல் வைத்து, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.கோவை சித்தாபுதூரிலுள்ள மதுரைவீரன், பட்டத்தரசியம்மன், முனியப்பன்சுவாமி கோவிலில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது. கோவில் முன்பாக, பொதுமக்கள், விழாக் குழுவினர், மகளிர் குழுக்கள் இணைந்து 108 பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சுவாமி வழிபாட்டுக்கு பின், பொதுமக்களுக்கு பொங்கல் விருந்து வழங்கப்பட்டது. பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கு தனித்தனியாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.