பதிவு செய்த நாள்
15
ஜன
2014
02:01
சுறுசுறுப்புடன் பணியாற்றி வரும் கடகராசி அன்பர்களே!
விடா முயற்சியுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக இது அமையும். செவ்வாய் மட்டுமே நற்பலன் அளிப்பார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால், செயல் நிறைவேற கடின முயற்சி தேவைப்படும். செவ்வாய் பிப்.4ல் வக்கிரம் அடைகிறார். வக்கிர காலத்தில் அவரால் கெடுபலன் நேராது. மாறாக நன்மையே கிடைக்கும். செவ்வாயால் பக்தி மேம்படும். எடுத்த செயல் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதாரம் மேம்படும். பணப்புழக்கத்துக்கு குறை இருக்காது. தேவை பூர்த்தியாகும். ஆனால் தம்பதியிடையே பிரச்னை உருவாகலாம். ஜன.26க்குப் பிறகு சுப நிகழ்ச்சி நடக்கும். பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். ஆனால், பிப்.8,9ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உழைப்புக்கு மரியாதையும் வருமானமும் கிடைக்கும். ஜன.26க்குப் பிறகு பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரம் கொடி கட்டி பறக்கும். தொழில், வியாபாரத்தில் எதிரி தொல்லை ஏற்பட்டாலும், எதிர்த்து வெல்லும் ஆற்றல் உண்டாகும். பெண்களால் ஏற்பட்ட சிரமம் ஜன.16க்குப் பிறகு நீங்கும். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் பெற்றிட அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர் பார்க்க முடியாது. ஜன.16க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்களுக்கு, ஜன.21,22,23 ஆகிய நாட்கள் சிறப்பானதாக இருக்கும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். கணவரிடம் கருத்துவேறுபாடு உருவாகலாம். விட்டுக்கொடுத்து போவது நல்லது. சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் முன்னேற்றம் அடைவர். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.
நல்ல நாள்: ஜன.16, 17,18,21,22,23,28,29,30,31, பிப்.5,6,7,8,9
கவன நாள்: பிப்.1,2 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,3 நிறம்: சிவப்பு
வழிபாடு: கேதுவை வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும். செவ்வாயன்று முருகனையும் வழிபட்டு வாருங்கள்.
தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.