பதிவு செய்த நாள்
15
ஜன
2014
02:01
துணிவுடன் செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே!
சூரியனாலும், புதனாலும் பகைவர் தொல்லைக்கு ஆளாவீர்கள். இனி கவலை வேண்டாம். பிரச்சினை பறந்தோடும். இடையூறும் இல்லாமல் இனி முன்னேறுவீர்கள். ஜன.16ல் சுக்கிரன் வக்கிரம் அடைந்து சாதகமான இடத்துக்கு மாறுகிறார். குரு,சனி,ராகு ஆகியோராலும் நன்மை பெறுவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். செவ்வாயால் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. சுக்கிரனால் பெரியோர் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வர். லாபம் அதிகரிக்கும். புதனால் பிரச்னை அனைத்தும் மறைந்து மகிழச்சி கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். வீட்டுக்கு தேவையான வசதி கிடைக்கும். காரியத்தடை அடியோடு மறையும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். பதவி, சம்பள உயர்வுக்கு தடைஏதும் இல்லை. சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். பிப்.8,9ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் புகழ் பாராட்டு பெறுவர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பலன் காண்பர். மாணவர்கள் சிறப்பான பலன் பெறுவர். இந்த மாதம் நன்கு படிப்பதோடு, போட்டிகளிலும் வெற்றி வாகை சூடும்வல்லமை கிடைக்கும்.விவசாயிகளுக்கு எந்த வகையிலும் வருமானத்திற்கு குறை இருக்காது. பயறு வகைகள் நெல், கேழ்வரகு, பச்சை காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். சிலர் புதிய சொத்து வாங்க முயற்சி மேற்கொள்வர். பெண்கள் நன்மையான பலன் பெறுவர். கணவனின் அன்பு கிடைக்கும். பிப்1,2 ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜன.26,27ல் உறவினர்களால் மனக்கசப்பு வரலாம். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.
நல்ல நாள்: ஜன.14,15,19,20,24,25,30,31, பிப்.1,2, 8, 9, 10,11,12
கவன நாள்: பிப்.3,4 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,3,9 நிறம்: மஞ்சள், செந்தூரம்
வழிபாடு: செவ்வாயன்று முருகனை வணங்குங்கள். துர்க்கை வழிபாடு துயரத்தை போக்கி தைரியத்தை வரவழைக்கும்.கேது அர்ச்சித்தால் உடல்நலம் மேம்படும்.