துலாம் (சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3) வளர்ச்சிக் காலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2014 02:01
தர்மசிந்தனையுடன் இருக்கும் லாம் ராசி அன்பர்களே!
புதன், குரு, சுக்கிரன் ஆகியோரால் மாதம் முழுதும் நன்மை கிடைக்கும். இது வரை இருந்த இடையூறு அடியோடு மறையும். குடும்பத்தில் நன்மை மேலோங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட கால எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். உறவினர்களிடம் கருத்துவேறுபாடு நீங்கி சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். ஜன.16க்குப் பிறகு, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடுவர். கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். பணியாளர்களுக்கு, சுக்கிரன் பலத்தால் வளர்ச்சி உண்டாகும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். ஜன.16,17,18ல் உன்னதமான பலனை காணலாம். தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன் உண்டாகும். வியாபாரம் வளர்முகமாக அமையும்.புதிய முயற்சியில் நன்மை உண்டாகும். பொருளாதார வளத்தில் குறையிருக்காது. பெண்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். பிப்.3,4ல் பகைவர்களை எதிர்த்து வெல்லும் ஆற்றல் பிறக்கும். கலைஞர்கள் சிறப்பான பலனை பெறலாம். புகழ் பாராட்டு கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் நல்ல பெயரோடு, பொருளாதர வளமும் காண்பர். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும். போட்டி பந்தயத்தில் வெற்றி கிடைக்கும். விவசாயிகளின் வருமானத்திற்கு குறையிருக்காது. பூமியில் விளைச்சல் பெருகி, நல்ல மகசூலைத் தரும். கால்நடை மூலம் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் குதூகலமாக இருப்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்க பெறுவர். ஆடை, அணிகலன் வாங்குவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். உடல் நலம் மேம்படும். பித்தம், மயக்கம் போன்ற உபாதை பிப்.4க்கு பிறகு குறையும்.
நல்ல நாள்: ஜன.16,17,18,19,20,24,25,28,29, பிப்.3,4, 5,6,7 கவன நாள்: பிப்.8,9 சந்திராஷ்டமம் அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: வெள்ளை, மஞ்சள் வழிபாடு: சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பெருமாள் கோயிலுக்கும் செல்லுங்கள். ஞாயிறன்று ஏழைக்கு கோதுமை தானம் அளியுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »