பதிவு செய்த நாள்
15
ஜன
2014
03:01
வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
சூரியன் சாதகமான 3-ம் இடத்திற்கு வந்து விட்டார். அதோடு சுக்கிரன்,செவ்வாய்,கேது ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். செல்வாக்கும், பொருளாதார வளமும் கூடும். உடல் நலம் சிறப்படையும். செவ்வாய்,கேதுவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லை மறையும். பணப்புழக்கம் இருக்கும் அளவு செலவும் ஏற்படும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் அத்தியாவசியத் தேவைக்கு குறை இருக்காது. கணவன்- மனைவி இடையே அன்பு நீடிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.பெண்களால் பொருள் சேரும்.தொழிலதிபர், வியாபாரிகளுக்கு பகைவர்களின் இடையூறு மறையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். சில நேரங்களில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம். சுக்கிரனால் அரசின் சலுகை கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். அதேநேரம், சுக்கிரனால் செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.. போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். எதிலும் வெற்றி காணலாம். அதிகாரம் கொடி கட்டி பறக்கும். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டும், புதிய ஒப்பந்தமும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனையை பெறுவது நன்மை தரும்.விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலமான காலம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பெண்கள் அக்கம் பக்கத்தினருடன் அனுசரணையுடன் இருப்பர். ஆபரணம் வாங்கலாம்.
நல்ல நாள்: ஜன. 19,20,21,22,23,26,27, 30,31, பிப். 5,6,7,8,9.
கவன நாள்: ஜன.14,15, பிப்.10,11,12 சந்திராஷ்டமம், கவனம்.
அதிர்ஷ்ட எண்: 3,7,9. நிறம்: சிவப்பு, செந்தூரம்
வழிபாடு: புதன் கிழமை குலதெய்வத்தை வணங்கி பாசிப் பயறு தானம் செய்யலாம். குரு, சனி,
ராகு அர்ச்சனை செய்வதன் மூலம் மன வேதனை மறையும். நாகராஜரை வணங்கி வாருங்கள்.