சுக்கிரன் வக்கிரம் அடைந்தாலும், நற்பலன் தரும் விதத்தில் இருக்கிறார். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளன. எனவே எதிலும் நிதானத்துடன் சிந்தித்து செயல்படவும். புதன் ஜன.26லும், செவ்வாய் பிப்.4லும் வக்கிரம் அடைகின்றனர். அவர்களால் கெடுபலன் நேராது. குரு சாதகமற்று இருந்தாலும்,5-ம் இடத்துப் பார்வையால் நன்மை தருகிறார். இதனால், பிரச்னையை சமாளிக்கும் வலிமை பெறுவீர்கள். பண வரவு கூடும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். பொருளாதார வளம் ஓரளவே இருக்கும். செலவு அதிகரிப்பதால், சிக்கனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியிடையே அன்னியோன்ய சூழல் அமையும். பிப்.3,4ல் விருந்து-விழா என சென்று வருவீர்கள். ஜன.21,22,23ல் பெண்களின் உதவி கிடைக்கும். ஜன.28,29ல் அக்கம் பக்கத்தினர்களிடம் விரோதம் வரலாம். ஒதுங்கி இருப்பது நல்லது. பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். பணிச்சுமை கூடும். வேலை விஷயமாக, சிலர் குடும்பத்தை விட்டு பிரிவர். தொழில், வியாபாரத்தில் பெண்கள் வழியில் இருந்த பிரச்சினை மறையும். ஆனால் பகைவரால் பிரச்னை தலைதூக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் ஈடேறாமல் போகலாம். அலைச்சல் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தத்தை பெறுவர். அரசியல்வாதிகள் பொது நல சேவகர்கள் சீரான பலனை பெறுவர். புதிய பதவி பெற முயற்சி தேவைப்படும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குருவின் பார்வையால் பிற்போக்கான நிலை உருவாகாது. விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது. ஆடு, மாடு மூலம் நல்ல வளம் கிடைக்கும். பால் தொழிலில் முன்னேற்றம் காணலாம். சொத்து வாங்குவதை தற்காலிகமாக ஒத்தி போடுங்கள். பெண்கள் ஜன.26,27ல் புத்தாடை அணிகலன் வாங்கலாம். பிப்.3,4ல் பிறந்த வீட்டில் இருந்து பொருள் வாங்கலாம். உடல்நலம் சிலருக்கு வீண் கவலை தரலாம் கவனம்.