பதிவு செய்த நாள்
15
ஜன
2014
03:01
மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் தனுசு ராசி அன்பர்களே!
சுக்கிரன்,குரு,சனி,ராகு ஆகியோரின் நற்பலன் மாதம் முழுவதும் கிடைக்கும். மற்ற முக்கிய கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால், செயல் நிறைவேற முயற்சி தேவைப்படும். செவ்வாய் பிப்.4ல் வக்கிரமாகிறார். இதனால், பிற்போக்கான நிலை ஏற்படாது. சுக்கிரன் பலத்தால் பணப்புழக்கம் இருக்கும். செல்வாக்கு குறையாது. குடும்பத் தேவை பூர்த்தியாகும். மதிப்பு மரியாதை கூடும். புதன் ஜன.26ல் வக்கிரம் அடைகிறார். இதனால், அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஜன.16க்குப் பிறகு பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஜன.26க்குப் பிறகு சில பிரச்னை வரலாம். ஜன.28,29ல் பெண்கள் மூலம் நற்பலன் கிடைக்கும். ஜன.24,25ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். ஆனால் பிப்.3,4ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். பணியில் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். அதிகாரிகளின் ஆதரவும், பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஜன.21,22,23ல் எதிர்பாராத நற்பலன் கிட்டும். புதிய முயற்சியில் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். ஜன.26க்குப் பிறகு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மாதத் தொடக்கத்தில் அரசாங்க வகையில் சலுகை கிடைக்கும். செவ்வாய் சாதகமற்ற நிலையால் எதிரிதொல்லை உருவாகும் கவனம். உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றியுடன் இருப்பர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பொதுநல சேவகர்கள், அரசியல் வாதிகள் மேம்பாடு காண்பர். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயி அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். பிப்.1,2 ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம்.
நல்ல நாள்: ஜன.14,15,21,22,23,24,25,28,29, பிப்.1,2,8,9,10,11,12
கவன நாள்: ஜன. 16,17,18 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: வெள்ளை, நீலம்
வழிபாடு: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
செவ்வாயன்று முருகனை வணங்குங்கள். நடராஜர் வழிபாடு மனமகிழ்ச்சியை தரும்.