சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் நற்பலன் கொடுப்பார். பெண்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஜன.16க்கு பிறகு வக்கிரம் அடைந்து 12ம் இடத்திற்கு செல்கிறார். இதனால் காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம். மற்ற கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. அதற்காக கவலை வேண்டாம். புதன் ஜன.26ம் தேதியும், செவ்வாய் பிப்.4ம் தேதியும் வக்கிரம் அடைகிறார்கள். இதனால் அவர்களால் ஏற்படும் கெடுபலன்கள் எள்ளளவும் அண்டாது. குரு சாதமகற்ற இடத்தில் இருந்தாலும், அவரது 9-ம் இடத்து பார்வை கும்பத்தில் விழுகிறது. இதனால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். எந்த தடையையும் முறித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்படும். இதனால் பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். மேலும் குரு, வக்கிரம் அடைந்திருப்பதால் செய்யும் வேலை சிறப்படையும். திருமணம் போன்ற சுபங்கள் கைகூட பேச்சு வார்த்தை தொடங்கும். குடும்பத்தில் சிற்சில பிரச்னை வரலாம். உறவினர்களின் வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. பொருளாதார வளம் மேம்படும். நற்சுகம் ஏற்படும். சூரியனால் செல்வாக்கு பாதிக்கப்படலாம். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். சில நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். இடமாற்றம் வர வாய்ப்புண்டு. வியாபாரிகள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். போட்டியாளர்களின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவர். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். மாணவர்கள் அதிகமாக உழைத்தாலும், அதற்குரிய பலன் தாமதமாகவே கிடைக்கும். விவசாயிகளுக்கு தொய்வு நிலை மாறும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். சுயதொழில் செய்யும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும் .