கும்பம் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) குதூகல மாதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2014 03:01
விடாமுயற்சியுடன் செயல்பட்டு சாதிக்கும் கும்ப ராசி அன்பர்களே!
சுக்கிரன் ஜன.16ல் வக்கிரம் அடைந்து சாதகமான இடத்துக்கு மாறுகிறார். பண வரவு இருக்கும். சொந்தபந்தம் வருகை இருக்கும். உடல் நலம் மேம்படும். குரு,கேது ஆகியோரால் நன்மை பெறுவீர்கள். பக்தி உயர்வு மேம்படும். பொருளாதார வளம் சிறக்கும். புதன் ஜன.26லும், செவ்வாய் பிப்.4லிலும் வக்கிரம் அடைகின்றனர். அவர்களால் கெடுபலன் உண்டாகாது. மாறாக நன்மையே தருவார்கள். குரு,கேதுவால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். வருமானத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மதிப்பு, மரியாதை உயரும். பொன், பொருள் சேரும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். விருந்து விழா சென்று வருவீர்கள். பிப்.5,6,7 ல் புத்தாடை அணிகலன் வாங்கலாம். ஜன.28,29ல் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். ஆனால் பிப்.8,9 ல் உறவினர்களிடம் கருத்துவேறுபாடு உருவாகலாம். பணியாளர்கள் சிறப்பான பலன் பெறுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கை நிறைவேறும். ஜன.26,27ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். சுக்கிரனின் பலத்தால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சூரியன், புதன் சாதகமற்று இருப்பதால் எதிரி விஷயத்தில் கவனம் தேவை. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. மாணவர்களுக்கு குருவின் பலத்தால் நன்மை ஏற்பட்டாலும், புதன் சாதகமற்று இருப்பதால் படிப்பில் அக்கறையும் தேவை. விவசாயிகள் உழைப்புக்கேற்ப ஆதாயம் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறாமல் போகும். பெண்களுக்கு விருந்து, விழா என சென்று வரும் வா#ப்பு கிடைக்கும். ஜன.16,17,18ல் விரும்பிய ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியிருக்கும். பித்தம், மயக்கம் போன்ற உபாதை உருவாகலாம் கவனம்.
நல்ல நாள்: ஜன.16,17,18,19,20,26,27,28,29, பிப்.1,2,5,6,7 கவன நாள்: ஜன.21,22,23 சந்திராஷ்டமம் அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: மஞ்சள், சிவப்பு வழிபாடு: சனியன்று சனி பகவானை வழிபட்டு காக்கைக்கு எள் சோறிடுங்கள். தினமும் காலையில் சூரியனை வழிபடவும். ஆஞ்Œ@நயரை வழிபடுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »