பதிவு செய்த நாள்
16
ஜன
2014
11:01
ராமேஸ்வரம்: தைப்பூச விழாவையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்தனர். நேற்று அதிகாலை 2 மணிக்கு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை திறந்து, ஸ்படிலிங்க பூஜை, காலை பூஜை முடிந்தவுடன், கோயிலில் இருந்து சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்தியுடன் புறப்பாடாகி, லெட்சுமணர் கோயிலில் எழுந்தருளினர். மாலை, கோயில் குருக்கள் மந்திரங்கள் முழங்க மகா தீபாரதனை முடிந்து, தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்தியுடன் எழுந்தருளினர். பின், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க 11 முறை தேர்வலம் வந்தது. கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் ராதா, அண்ணாத்துரை உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.