ஏர்வாடியில் மிலாடி ஊர்வலம் புதுமடத்தில் கந்தூரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2014 11:01
கீழக்கரை: ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா ஹக்தார்கள் நிர்வாக சபை சார்பில் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, மிலாடி ஊர்வலம் நடந்தது. தலைவர் அம்சத் ஹூசைன் தலைமை வகித்தார். செயலாளர் செய்யது பாருக் ஆலிம், துணை தலைவர் செய்யது சிராஜ்தீன் முன்னிலை வகித்தனர். முன்னாள் செயலாளர் துல்கருணை பாட்சா துவக்கி வைத்தார். ஏர்வாடி தைக்காவில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக தர்கா சென்றடைந்தது. பேஷ் இமாம்(மதகுரு) இஸ்மாயில் ஆலிம் உலக மக்களின் அமைதி, நல்லிணக்கம் வேண்டி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். பெண்கள் பள்ளிவாசலில் சிறப்பு பயான் (சொற்பொழிவு) நடந்தது. ஏற்பாடுகளை தர்கா கமிட்டி ஹக்தார்கள் செய்தனர்.புதுமடம்: புதுமடம் நடுத்தெரு ஜமாத் தலைவர் எம்.சையது முஸ்தபா, வடக்கு தெரு ஜமாத் தலைவர் யு.அப்துல் காதர் தலைமையில் மிலாது நபி விழா நடந்தது. தெற்குத்தெரு ஜமாத் சார்பில் நேற்று கந்தூரி விழா முன்னாள் தலைவர் எம்.ஆர்.ஜமால் முகமது தலைமையிலும், ஏ. சகுபர் அலி முன்னிலையிலும் நடந்தது. ஜமாத் தலைவர் ஜெ.சையது முகமது, செயலாளர் ஹாஜா மொய்தீன், பொருளாளர் அபுல் கலாம், முஷ்ரப் மற்றும் இளைஞர் சங்கத்தினர், ஆலிம்கள், உலமாக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.