பதிவு செய்த நாள்
16
ஜன
2014
11:01
பழநி: பழநி தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், பெரியநாயகியம்மன் கோயிலில், மாலையிலும் தேரோட்டம் நாளை மாலையிலும் நடக்கிறது. பாதயாத்திரைக்கு புகழ்பெற்ற, பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மலைக்கோயிலில் 4 மணிநேரம் வரை காத்திருந்து, மூலவர் தண்டாயுதபாணியை தரிசனம் செய்கின்றனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், இன்று மாலை 6.30 மணிக்கு மேல் பெரியநாயகியம்மன் கோயிலில் நடக்கிறது. இரவு 8.30 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில், முத்துகுமராசுவாமி வள்ளி,தெய்வானையுடன் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை தைப்பூசத்தை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்படுகிறது. பெரியநாயகியம்மன் கோயிலில், காலை 10 மணிக்கு மேல், சுவாமி தேர் ஏற்றம் செய்யப்பட்டு, மாலை 4.45 மணிக்கு தேரடி தேர்நிலையில் இருந்து தேரோட்டம் துவங்கி, நான்கு ரத வீதிகளில் தேர் வடம்பிடித்தல் நடக்கிறது.