திண்டுக்கல்: ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வதால் திண்டுக்கல் நத்தம் ரோடு களைகட்டியது.காரைக்குடி, சிவகங்கை பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் நத்தம் ரோடு வழியாக பழநி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டும் இவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ரோடுகளின் அருகில் வசிப்பவர்கள் பக்தர்கள் ஓய்வெடுத்து செல்வதற்காக கூரைகளை அமைத்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் அதிகாலையிலேயே காத்திருந்து தங்களால் இயன்றதை வழங்கி வருகின்றனர். இட்லி, பொங்கல், வடை, பிஸ்கெட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், மோர், கரும்பு துண்டுகள், தக்காளி, லெமன் சாதம் என உணவு வகைகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. வாகனங்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் சென்று வரும் நத்தம் ரோடு, பாதயாத்திரை பக்தர்கள் வருகை காரணமாக களை கட்டியுள்ளது.