பதிவு செய்த நாள்
17
ஜன
2014
11:01
வடலூர்: வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், 143வது ஆண்டு, தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், 143வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழாவில் கருமை, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு நிற திரை என, ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும், 19ம் தேதி, வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.