பதிவு செய்த நாள்
17
ஜன
2014
11:01
சென்னை: ஆண்டாளின் பாசுரங்களையும், கருத்துகளையும் இளைய தலைமுறை அறிந்து கொள்ள வசதியாக, சென்னையில், "ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் நிகழ்ச்சி, நாளை துவங்குகிறது. பாஞ்சஜன்யம் டிரஸ்ட், ச்ருதிஸ்ம்ருதி டிரஸ்ட் மற்றும் சரண் என்னும் அமைப்புகள் இணைந்து நடத்தும், இந்த நிகழ்ச்சி, நங்கநல்லூர், செல்லம்மாள் இந்து வித்யாலயா பள்ளியில் நடக்கிறது. நாளை பகல், 1:00 மணிக்கு துவங்கும் விழாவில், அமிர்தா முரளி, வசுந்தரா ராஜகோபாலன் பாடுகின்றனர். நாட்டிய நிகழ்ச்சியும், உபன்யாசமும் நடக்கிறது. பக்தி கண்காட்சி மற்றும் புத்தக அரங்குகளும் திறக்கப்படுகின்றன. ஜன., 19, பகல், 1:00 மணிக்கு, அறிஞர்கள் பங்கேற்கும் திவ்ய பிரபந்த கருத்தரங்கம், சங்கீத உபன்யாசம் மற்றும் வனமாலை நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த தகவலை, பக்தி உபன்யாசகர் டாக்டர் எம்.வி.அனந்த பத்மநாபாச்சாரியார் தெரிவித்தார்.