இதற்கு வயது தேவையில்லை. யாரொருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலை வருகிறதோ, அப்போது ஊரிலிருக்கும் கருப்பன் முதல் கந்தன் வரை ஞாபகத்துக்கு வந்துவிடுவார்கள். நோய் தீர்ந்துவிட்டால், அவரவர் இருப்பிடத்திற்கு அனுப்பி விட்டு மறந்து விடுவார்கள். இறைவன் நமக்கு தினமும் உணவளிக்கிறானே! அதற்குக் கூட எத்தனை பேர் நன்றி சொல்கிறார்கள்! போதாக்குறைக்கு நான் உழைக்கிறேன், சாப்பிடுகிறேன் என்று விதண்டாவாதம் வேறு செய்கிறார்கள்.