பதிவு செய்த நாள்
18
ஜன
2014
10:01
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச விழாவையொ ட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 8:30 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில், நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. பொள்ளாச்சி ஜோதி நகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், காலை 9:30 மணிக்கு, முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இது போன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களில், தைப்பூச விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.
பாதயாத்திரை: தைப்பூசத்திருவிழாவையொட்டி, கோவை, கிணத்துக்கடவு, பொள் ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும் பாதயாத்திரையாக பழநிக்குச்சென்றனர். சிலர் காவடி ஏந்தியபடியும்; அரோகரா கோஷங்களை எழுப்பியபடியும் சென்றனர்.