சாமித்தோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதிதை திருவிழா தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2014 11:01
நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆறு மணிக்கு தலைமைப்பதி நிர்வாகக்குழுவை சேர்ந்த பாலஜனாதிபதி கொடியேற்றினார். 12 மணிக்கு கோயில் வடக்கு வாசலில் அனனதானம் நடைபெற்றது. இன்று முதல் தினமும பல்வேறு வகையான வாகனங்களில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.வரும் 24-ம் தேதி எட்டாம் நாள் விழாவில் அய்யா குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.