கந்த சஷ்டி கவசத்தை இயற்றியவர் தேவராய சுவாமிகள். இவர் சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய, உரிய ஆலயம் சென்னிமலை ஆண்டவர் திருக்கோவிலே என்பதை அருளாணையால் உணர்ந்தார். அதன்படியே இக்கோவிலில் சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்தார். இந்நூலில் "சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக என்ற அடி வருவதைக் காணலாம். சிரகிரி என்பது சென்னிமலையைக் குறிக்கிறது.