பதிவு செய்த நாள்
21
ஜன
2014
03:01
காஞ்சிபுரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் நம்பெருமாள் கோவிலில், திருத்தேர் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்துள்ள கூரம் கிராமத்தில், கூரத்தாழ்வான் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தைமாதத்தில் நடைபெறும். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பிரம்மோத்சவம் கடந்த 13ம் தேதி துவங்கியது. இதில், பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வந்த நிலையில், திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில், காலை 7:00 மணிக்கு, உற்சவர் கூரத்தாழ்வான் நம்பெருமாள் திருத்தேர் மீது எழுந்தருளினார். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, வடம் பிடித்தனர். முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று திருத்தேர் பகல் 1:00 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது. மேலும், இன்று திருப்பல்லக்கு மற்றும் நாளை விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.