மதுரை அருகே உள்ள திருப்புவனத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் தேங்காய்ப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு ஏழு தேங்காய்களை மாலையாக அணிவித்து ஏழு எலுமிச்சம் பழம் வைத்து வலம் வந்து வழிபட்டால் ஆயுள்பலம் கூடும் என்கிறார்கள். பொதுவாக கிழக்கு முகமாகக் காட்சியளிக்கும் விநாயகர் இங்கு தெற்கு முகமாக அருள்கிறார். கேது பரிகாரத்தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.