பெருமாள் கோயில்களில் சுவாமியின் எதிரே ஆஞ்சநேயர் தனிச் சன்னதியில் இருப்பார். சில தலங்களில் சுவாமிக்கு அருகில் நின்ற கோலத்தில் இருப்பார். ஆனால் மதுரைக்கு அருகிலுள்ள மண்ணடி மங்கலம் நரசிம்மன் கோயிலில் ஆஞ்சநேயர் தன்னைத்தானே வணங்கும் அபூர்வ காட்சியை தரிசிக்கலாம். இக்கோயிலின் முன் மண்டபச் சுவரில் ஆஞ்சநேயர் சிற்ப வடிவில் இருக்கிறார். இவருக்கு முன்புறத்தில் மற்றொரு ஆஞ்சநேயர் இவரை இரு கரம் கூப்பி வணங்கிக் கொண்டிருக்கிறார். இத்தலத்து நரசிம்மரையும் இரண்டு ஆஞ்சநேயர்களையும் வழிபட்டால் மன பாரம் நீங்கும். செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.