சூரியன் தனது பயணத்தை வடக்கு நோக்கி துவங்கும் தை மாத அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு உரியது. இந்நாளில் காலம் சென்ற பெற்றோர், முன்னோர்களை நன்றியுடன் நினைத்துவழிபடுவது பிள்ளைகளின் கடமை. அவர்களுக்காக விரதம் இருப்பதும், தீர்த்தக் கரைகளில் நீராடி தர்ப்பணம் செய்வதும் சிறப்பு. இந்நாளில் முன்னோர்கள், நாம் அளிக்கும் உணவை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். அமாவாசையன்று வாசலில் கோலமிடாமல், செம்மண் மட்டும் இடுவர். இதற்கு காரணம், அமாவாசை நாளில் தெய்வ வழிபாட்டை விட, முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது தான். முன்னோர் ஆசி மூலம், குடும்பத்தில் வம்சவிருத்தி, சுபவிஷயம், புதுமுயற்சிகள் இனிதே நிறைவேறும்.