நாகர்கோவில்,: நாகர்கோவில் மூவேந்தர்நகர் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் யாகசாலை பூஜைகளும், தபாராதனை, யாத்திராகாணம், கடங்கல் யாக சாலையை விட்டு புறப்பட்டு ஆலயம் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 9.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகள் ஊர்தலைவர் சந்திரசேகரன் தலைமையில் செய்யப்பட்டிருந்தது.