திண்டிவனம்: தெய்யார் பெருமாளுக்கு அன்னகூட சமர்பிக்கும் விழா நாளை நடக்கிறது. வந்தவாசி தாலுகா தெய்யார் கிராமத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாளுக்கு நாளை (26 ம் தேதி) காலை 9 மணி முதல் அன்னகூட உற்சவம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு வீதியுலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீமத் ஆதிவன் சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் கைங்கர்ய டிரஸ்ட்டினர் செய்து வருகிறார்கள்.