திருமலை: ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கை சமர்பித்த தலைமுடியை விற்பனை செய்ததன் மூலம் ரூ.77.72 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 1,06,270 கிலோ தலைமுடியை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ததன் மூலம் ரூ.77.72 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.